தமிழகம் முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

Diwali
By Thahir Oct 24, 2022 02:47 AM GMT
Report

தமிழகம் முழுவதும் தீபாவளி நன்னாளை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி வரலாறு

தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையை இந்து மதத்தினர் மட்டுமின்றி சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், ஆகியோர் வெவ்வேறு காரணங்களை கூறி தீபாவளி திருநாள் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

இந்து மதத்தினரை பொருத்தவரை இது தீப ஒளி திருநாள் வாழ்வில் தீமைகள் அகன்று நன்மைகளை கொண்டு வரும் நாள்.

இந்து மத புராணங்கள் படி யாராலும் அழிக்க முடியாத, ஆனால் தாயால் மட்டுமே இவனை அழிக்க முடியும் என்ற சாகாவரம் பெற்ற அசுரன் நரகாசுரனை கடவுள் திருமாலின் அவதாரமான மகாவிஷ்ணு, மிகவும் சமயோஜிதமாக சத்தியபாமாவை அம்பெய்த வைத்து கொன்ற நாள் தான் தீபாவளி.

தீமையின் வடிவமான நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில் தாய் சத்தியபாமாவிடம் இந்த நாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டும் என்று வரம் கேட்க, சத்தியபாமாவும் மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவர் என்று வரம் கொடுத்த நாளென்றும், வட மாநிலங்களில் இந்து மத கடவுள் ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி என்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

உற்சாக கொண்டாட்டம் 

Diwali is celebrated all over Tamil Nadu

தமிழகத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளிளை கொண்டாடி வருகின்றனர். தீப ஒளி திருநாளான இந்த நன்னாளில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்