தீபாவளி இறுதிகட்ட விற்பனை; மக்கள் கடலாக மாறிய மதுரை கடை வீதி

Diwali Madurai
By Thahir Oct 22, 2022 11:59 AM GMT
Report

தீபாவளிக்கு இறுதிகட்ட ஷாப்பிங் விறுவிறுப்படைந்துள்ளது.

இறுதிகட்ட விற்பனை 

தித்திக்கும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 நாட்கள் மட்டுமே உள்ளது.இதையடுத்து புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் உள்ள தி.நகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

diwali-final-sale-madurai-shopping-street

இதே போல மதுரை விளக்குத்துான் பகுதியில் ஏராளமான மக்கள் புத்தாடைகள், பட்டாசுக்களை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

திருநெல்வேலி, கோயம்புத்துார், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.