தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் - தமிழக அரசு அறிக்கை வெளியீடு

Statement Diwali Govt Fireworks explode
By Thahir Nov 01, 2021 01:41 PM GMT
Report

தமிழகத்தில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது குறித்து, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளையில், அதிக ஒலி, ஒளி மாசினை ஏற்படுத்தும் சரவெடிகளைத் தவிர்க்குமாறும், அமைதிகாக்க வேண்டிய மருத்துவமனை, பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும்,

குடிசைப் பகுதிகள், எளிதில் தீப் பிடிக்க வாய்ப்புள்ள இடங்களிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பொறுப்புணர்ச்சியோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறும், எந்த வகையிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.