தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை - டெல்லி அரசு அதிரடி...!
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதனையடுத்து, கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்துள்ளது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வாங்கி வெடித்தால் சிறைத்தண்டனை
இந்நிலையில், டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவித்திருக்கிறார்.
மேலும், பட்டாசு தயாரித்தல், பட்டாசு விற்பனை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.