இடப்பிரச்சனையால் கொலையில் முடிந்த தீபாவளி கொண்டாட்டம் - போலீசார் விசாரணை
அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய வாக்குவாதத்தில் தொடங்கிய தகராறு கொலையில் போய் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் ரதவீதியில் வீர வெங்கடேசா அடுக்குமாடி குடியிருப்பில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
வீர வெங்கடேஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விநாயகக்காமத் (44 வயது) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கிருஷ்ணாநந்த கினி மற்றும் அவரது மகன் அவிநாஷ்கினி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் சிமெண்ட் சாலையில் காரை இயக்கியது தொடர்பாக நேற்று இரவு விநாயகா காமத் மற்றும் கிருஷ்ணிநந்த கினி ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த தகராறு முற்றி கொலையில் முடிந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது நடந்த கத்திக்குத்துச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
காயமடைந்த விநாயகாகாமத் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக பந்தர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணானந்த் கினி மற்றும் அவரது மகன் அவினாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.