தீபாவளி பண்டிகை விற்பனை.., நாடு முழுவதும் ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம்

Diwali
By Yashini Nov 11, 2026 06:21 AM GMT
Report

Diwali business worth rs 7 lakh crore across nation- நாடு முழுவதும் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.7 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம்

தீபாவளிக்கு முந்தைய நாள், இந்த ஆண்டு ரூ.6 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறும் என கூட்டமைப்பு கணித்திருந்தது.

ஆனால், எதிர்பார்ப்பை விட விற்பனை அதிகரித்து ரூ.7 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

தலைநகர் டெல்லியில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி விற்பனை 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை விற்பனை.., நாடு முழுவதும் ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம் | Diwali Business Worth Rs 7 Lakh Cr Across Nation

குறிப்பாக, ஜவுளி மற்றும் தங்க நகைகள் மட்டுமின்றி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் விலை சற்று குறைந்ததால் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையும் ஓரளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அகல் விளக்குகள், தோரணங்கள், பட்டாசுகள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் என பல்வேறு பொருள்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கியுள்ளனர்.

இந்த விற்பனை சிறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், போக்குவரத்துத் துறையினர், சிறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.