கார்த்தியின் சர்தார் ஒர்க் அவுட் ஆனதா? : ட்விட்டர் விமர்சனம் இதோ

Karthi Sardar
By Irumporai Oct 21, 2022 05:22 AM GMT
Report

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உளவாளிகள் பற்றிய கதை களத்தில் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார்.

இந்த நிலையில் , இன்று காலை 8 மணிக்கு சர்தார் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இந்த படத்தில் கார்த்தி 15 கெட்டப்புகளில் நடித்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு 150 லொக்கேஷன்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனாலேயே சர்தார் படம் ரசிகர்களை பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் சர்தார் படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு தான் ஆரம்பமானது. மேலும் இப்படம் என்னுடைய லட்சிய படங்களில் ஒன்று. உங்கள் அன்பு எல்லாம் வேண்டும் எனவும் நடிகர் கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடதக்கது.

கார்த்தியின் சர்தார் ஒர்க் அவுட் ஆனதா? : ட்விட்டர் விமர்சனம் இதோ | Diwali 2022 Release Karthi S Sardar Movie