10 வருஷமா அவ்வளவு வலி; யூஸ் பண்ணி தூக்கி எறிஞ்சுட்டாங்க - போட்டுடைத்த டிடி!
காலில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து டிடி மனம் திறந்துள்ளார்.
திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
10 வருட வலி
தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "எனக்கு முன்னால் முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதற்காக ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அறுவை சிகிச்சையானது தவறாக முடிந்து விட்டது.

அதை சரி செய்வதற்காக இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். விஜய் டிவியில் நிற்காமல் செய்யக்கூடிய ஒரு ஷோ கூட இல்லை; அவர்களுடைய கஷ்டமும் எனக்கு நன்றாகவே புரிந்தது. எனக்கு இந்த பிரச்சினை 2013ல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது.
இந்த 10 வருடங்களில் நான் வலி இல்லாமல் தூங்கியது என்று பார்த்தால் வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும். சினிமாவில் எனக்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் ஒரு ஷாட்டுக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வந்தால் போதும்.
என்னால் இரண்டு நிமிடங்கள் நிற்க முடியும். அதற்கு மேல் நான் இருக்க முடியாது. மேலும் சினிமாவில் நான் என்னுடைய ஸ்டிக்கை பயன்படுத்திக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil