அப்படி இல்லனா தூக்கி வீசிருவாங்க; லேட்டாதான் தெரிஞ்சது அந்த வலி - கண்ணீரோடு டிடி!

Tamil Cinema Star Vijay Dhivyadharshini
By Sumathi Mar 05, 2024 08:18 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி கண்ணீரோடு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி 

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

divyadarshini

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவரது சமீபத்திய பேட்டி ஒன்றில் நாம் ஆரோக்கியமாகவும், நம்மால் ஒரு காரியம் ஆகிறது என்றால் தான் நம்மை ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள். நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பது என்னுடைய வாழ்க்கையில் நான் லேட்டாக கற்றுக் கொண்டது.

2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா!

2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா!

 உடல் நிலை

கால் வலியால் அதனாலேயே நான் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் கூட திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் எனக்கு உட்கார்ந்து கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது போன்று எல்லா தொகுப்பாளர்களுக்கும் கிடைத்தால் அவர்களுடைய உடல் நிலை பாதுகாக்கப்படும்.

அப்படி இல்லனா தூக்கி வீசிருவாங்க; லேட்டாதான் தெரிஞ்சது அந்த வலி - கண்ணீரோடு டிடி! | Divyadarshini Emotional Interview About Career

ஆனால் பல பேர் அதை செய்வதற்கு தயாராக இல்லை தொகுப்பாளருக்கு ஒரு சேர் போடுவதற்கு பலர் யோசிக்கிறார்கள். அதனால் தான் நான் சில நிகழ்ச்சிகளை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என கண்ணீரோடு பேசியுள்ளார்.