போல்டான சீன்..அந்த மாறி நடிக்க 45 டேக் ஆச்சு - திவ்யபாரதி பற்றி ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்!
'பேச்சுலர்' படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்த ஒரு முக்கிய சீன் குறித்து பகிர்ந்துள்ளார்.
திவ்யபாரதி
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 'பேச்சுலர்' படம் வெளியானது. இது ஜி.வி. பிரகாஷுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். இதுவரையிலும் ஒரு சாதாரண ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் ரொம்பவே போல்டாக நடித்திருப்பார்.
பேச்சுலர் படத்தின் டீசரில் வெளியான போது மிக பெரிய சர்ச்சை ஆனது. ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்த திவ்யபாரதியின் முதல் படம் இதுவே ஆகும். முதல் படமே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது.
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேச்சுலர் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யபாரதியின் லிப் லாக் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் என படு நெருக்கமான காட்சிகள் பல இடம்பெற்று இருந்தது.
45 டேக்
மேலும், கமல் பிரகாஷ் இயக்கத்தில் அடுத்து இயக்கவுள்ள கிங்ஸ்டன் திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் உடன் திவ்யபாரதி நடித்துள்ள நிலையில் பேச்சுலர் படத்தின் கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் தொடருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுலர் படத்தின் டீசரில் இடம்பெற்ற "நீ என்ன லவ் பண்றியா?" என திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷை பார்த்து கேட்க அதற்கு ஆமாம் அல்லது இல்லை என்பது போல தலையாட்டும் காட்சி பெங்களூரில் உள்ள ஒரு பிஸியான ஸ்ட்ரீட்டில் படமாக்கினோம் என்றும் அந்த காட்சியை படமாக்க அதிகபட்சமாக 45 டேக்குகள் திவ்யபாரதி எடுத்துக் கொண்டார்
என்றும் பல போல்டான சீன்களையே அசால்ட்டாக நடித்தவர் இந்த காட்சிக்கு மட்டும் அத்தனை டேக்குகள் ஏன் எடுத்தார் என தெரியவில்லை என ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டி ஒன்றில் இதை கூறியுள்ளார்.