கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன: பெண் யூ-டியூபர் திவ்யா அதிரடி கைது
தேனி யூ-டியூபர் குறித்து வலை தளத்தில் ஆபாச பதிவை வெளி யிட்ட தஞ்சையைச் சேர்ந்த பெண் யூ-டியூபரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி (35). இவரும், இவரது அக்கா நாகஜோதியும் யூ-டியூப் வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தைச் சேர்ந்த யூ-டியூபர் திவ்யா (30) என்பவர், சுகந்தி குறித்து வலைதளங்களில் ஆபாச பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சுகந்தி கடந்த மாதம் 14-ம் தேதி தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான தனிப்படையினர் திவ்யாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் நாகூரில் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.