திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
விஜய் அரசியல்
நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் பேசுகையில், திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.

தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர். எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல ஆபீஸ் ரூமில் இருந்து லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது. ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதார் என்று கேட்கிறாங்க.
ஏன் என்றால் அவருக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தார்கள். ஜோதிமணி மேம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. சும்மா லாஜிக்கே இல்லாமல், நீங்க பெர்மிசன் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என சொல்கிறார்கள்.
திவ்யா விளாசல்
ஏன் எல்லாத்தையும் எங்க கிட்ட கேட்டா செய்யுறீங்க. நாங்க என்ன பிரின்ஸ்பல். நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா. எல்லாத்தையும் எங்க பெர்மிசனோடு தான் பண்றீங்களா. எனவே கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க. காவல்துறை எதுக்கு இருக்காங்க. நம்மளை பாதுகாக்கிறதற்கு. ஆனால் காவல்துறை மீது பால் வீசுறுது. மரத்து மேல ஏறுகிறது.

காவல்துறையை கடித்து வைக்கின்றது. இதையெல்லாத்தையும் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா வேண்டாமா. நடிகர் யோகி பாபுவோட பெரிய பேன் நான். எனக்கு யோகி பாபு சாரை கடத்துகின்ற அளவுக்கு பிடிக்கும். அதற்காக யோகி பாபு நாளைக்கு கட்சி ஆரம்பித்தார் என்றால் அவர் நாளைக்கு மக்கள் பணி எப்படி செய்வார்?
எந்த அளவுக்கு செய்வார்? என்பதை பார்த்து தான் ஓட்டு போடுவேன். யோகி பாபு சார் க்யூட்டா இருக்கிறார் என்பதற்காக நான் அவருக்கு ஓட்டு போட மாட்டேன். ஒரு ரசிகனுக்கும், ஒரு குடிமகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை நாம எல்லாரும் புரிஞ்சு வைத்துக்கிடனும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.