விவாகரத்து வாங்கிய கணவனை வீதியில் இழுத்து போட்டு அடித்த முதல் மனைவி!
மத்திய பிரதேசம் ஒசாங்காபாதி இட்ரசியில் வசித்து வரும் சந்திரகாந்த் ரோகர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் விவாகரத்து பெற்ற முதல் மனைவியோ, இந்த விவகாரத்தை ரத்து செய்யுமாறு கேட்டு மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை காவல் நிலையத்திற்கு வர வைத்துள்ளனர். அப்போது புகார் கொடுத்த முதல் மனைவியின் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது இரண்டாவது திருமணம் செய்தது சரி என்று சந்திரகாந்த் சொல்லி வந்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி,
கணவன் சந்திராகாந்தை இழுத்துப்போட்டு அடிக்க துவங்கிவிட்டார். அவரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே தரதரவென இழுத்து போட்டு அடிக்க, இதைக்கண்ட போலீசார்
உடனடியாக சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு மேல் போலீஸ் நிலையத்தில் சமாதானப்படுத்த முடியாது என்று சட்டப்படியே இந்த விவரத்தை சந்தித்துக்
கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி போலீஸ் அனுப்பி வைத்திருக்கிறது.