17 வருட திருமண வாழ்க்கை முடிவு - தனுஷ், ஜீவி வரிசையில் சீனு ராமசாமி!

Sumathi
in பிரபலங்கள்Report this article
மனைவியை விவாகரத்து செய்வதாக சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
சீனு ராமசாமி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சீனு ராமசாமி. நீர் பறவை, தர்மதுரை, தென்மேற்கு பருவமழை, மாமனிதன், கண்ணே கலைமானே போன்ற முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை என்ற படம் வெளியானது. இந்நிலையில், தன் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விவாகரத்து
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும்,
அறிவிப்பு
— Seenu Ramasamy (@seenuramasamy) December 11, 2024
.....................
அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது…
எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.
இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ், ஜீ.வி.பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் என பல பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக விவாகரத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.