முதலிரவில் விவாகரத்து - இளம்பெண்ணால் உறைந்துபோன மணமகன்
திருமணம் நடந்து வெறும் 20 நிமிடங்களில் விவாகரத்து நடந்தேறியுள்ளது.
திருமண உறவு
உத்தரப் பிரதேசம், பாலூவானியில் தனது தந்தையுடன் மளிகைக் கடை நடத்தி வந்த விஷால் மதேஷியா என்பவருக்குக் கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது.

சலேம்பூரைச் சேர்ந்த பூஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து திருமண ஊர்வலமும் சிறப்பாக நடந்தது. பின் அனைத்துத் திருமணச் சடங்குகளும் முறைப்படி நிறைவடைந்து, முதலிரவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அப்போது 20ஆவது நிமிடம் அறையில் இருந்து வெளியே வந்த பூஜா, கணவருடன் வாழ விரும்பவில்லை எனக் கூச்சலிட்டுள்ளார். பூஜாவின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் வரவே, சுமார் 5 மணி நேரம் இந்த விவாதம் நடந்துள்ளது.
விவாகரத்து
ஒருமித்த தீர்வு எட்டப்படவில்லை. இதனால் அந்தப் பெண்ணை தாய் வீட்டிற்கே அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும், திருமணம் பரஸ்பர சம்மதத்துடன் முடிவுக்கு வருவதாக ஒப்பந்தம் போட்டனர்.

திருமணத்தின்போது பரிமாறப்பட்ட அனைத்துப் பரிசுகளையும், பணத்தையும் திரும்பத் தரவும் பஞ்சாயத்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பூஜா தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார்.
ஆனால் கடைசி வரை விஷால் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை.