திவாகரனுடன் உறவாடும் முன்னாள் அமைச்சர் காமராஜ் - அதிர்ச்சியில் அதிமுகவினர்
முன்னாள் அமைச்சர் காமராஜ், சசிகலா சகோதரர் திவாகரனுடன் நட்புறவு கொண்டாடி வருவது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விலக்கி வைத்த பிறகு, அவர்களுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக தொண்டர்களை அவ்வப்போது நீக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் கிராமத்தில் உள்ள ஆள்காட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.