சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர டிடிவி தினகரன் தான் காரணம் - திவாகரன் ஆவேசப்பேச்சு
சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர டிடிவி தினகரன் தான் காரணம் என சசிகலாவின் சகோதரரான திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவை தான் முழு மனதோடு வரவேற்பதாகவும்.மேலும் அரசியலை விட அவரது உடல் நலம் முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’சசிகலாவின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறேன். மேலும் அவருக்கு எதிரிகள் அவருடனே தான் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தினகரன் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டு அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்று எண்ணியதெல்லாம் வேடிக்கையாக உள்ளது.
மேலும் இதுகூட சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து விலக காரணமாக இருக்கலாம்" இவ்வாறு திவாகரன் தெரிவித்தார்.