தமிழகத்தை நெருங்கும் புயல் - எப்போது கரையை கடக்கும் - ரெட் அலர்ட்!
டிட்வா புயலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது.
டிட்வா புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரையோரத்தை நாளை (நவ.30) அதிகாலை அடையக்கூடும்.
புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
அதிகனமழை வாய்ப்பு
ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும்.

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா? Manithan