சேலம் மாவட்டத்தில் பள்ளி சென்ற 10- ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா
சேலம் மாவட்டம் தும்பல் பகுதியில் உள்ள ஊராட்சி பள்ளிக்கு சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்து.
இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பொது முடக்கத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவனோடு தொடர்பில் இருந்த மாணவர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அந்த மாணவன் படிக்கும் அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது.