தமிழகத்தில் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

By Fathima Nov 11, 2021 03:14 AM GMT
Report

தமிழகத்தில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கன மழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.