5 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

tamilnadu districtcollector
By Irumporai May 17, 2021 07:45 PM GMT
Report

ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே திமுக அரசு அதிரடியாக செயல்பட தொடங்கியுள்ளநிலையில் தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,:

திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசு நியமனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினி நியமனம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பதிலாக அனீஷ் சேகர் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு பதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.