அரசுப்பள்ளியில் பாடம் எடுத்த கலெக்டர் - வியந்துபோன கிராம மக்கள்
காஞ்சிபுரம் அருகே அரசுப்பள்ளியில் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியரைக் கண்டு அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டினர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீரென அருகில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர்ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி வகுப்பறைகளில் நுழைந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவ-மாணவிகளிடம் உரையாடினார்.
5 ஆம் வகுப்பு,6 ஆம் வகுப்பு,மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆசிரியையாக மாறி வகுப்பறை கரும்பலகையில் எழுதி இருந்த ஆங்கில இலக்கண பாடத்தை படிக்க வைத்து அதற்கான விளக்கத்தை மாணவ - மாணவிகளுக்குகூறி பாடம் நடத்தினார்.
அதன்பின் பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகளிடம் மாணவ மாணவிகளுக்கு முறையாக பாடம் நடத்த உத்தரவிட்டு ஆலோசனைகளை வழங்கினார். அவரது செயலை கிராம மக்களும், ஆசிரியர்களும் வியந்து, வெகுவாக பாராட்டியுள்ளனர்.