தமிழகத்தில் பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்
தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீடுதோறும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக பூத் சிலிப்-கள் விநியோகிக்கப்பட்டு வருகி்ன்றன.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் புகைப்படங்களை இணைத்துள்ளோம், வாக்குபதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பூத் சிலிப்களில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும், க்யூ ஆர் குறியூடும் இருக்கும்.
இதனை வாக்களிப்பதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.