பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.
NIA சோதனை
கடந்த 22ம் தேதி இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாக கூறியும், முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதாகவும், தீவிரவாத அமைப்புகளில் சேர அவர்களை தீவிரப்படுத்துவதாகவும் PFI அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100க்கும் மேற்பட்டார் பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சி வழங்கிய உளவுத்துறை அளித்த தகவலின் படி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நேற்று புலனாய்வு அமைப்புகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
PFI அமைப்புக்கு கலைப்பு
இந்த நிலையில் இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்கள் கவுன்சில், ரிஹாப் இந்தியா அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரிஹாப் அறக்கட்டளைஉள்ளிட்ட துணை அமைப்புகளும் சட்டவிரோதமானது எனக் கூறி 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர், உள்ளிட்ட சமூக வளைத்தல பக்கத்தை முடக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் ஒன்றிய அரசின் தடையை ஏற்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.