விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட்டின் செயற்கைக்கோள்களின் சிக்னல் துண்டிப்பு...!

Indian Space Research Organisation
By Thahir Aug 07, 2022 06:21 AM GMT
Report

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்களை நிலைநிறுத்து முடியவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணில் ஏவபட்ட ராக்கெட் 

புவி கண்காணிப்பு உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது.

விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட்டின் செயற்கைக்கோள்களின் சிக்னல் துண்டிப்பு...! | Disruption Of Satellite Signal

145 கிலோ எடைகொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் இது உருவாக்கப்பட்டது.

சிக்னல் துண்டிப்பு 

இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என முன்னதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில், செயற்கைக்கோள்கலை தொடர்பு கொள்ள முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைநிறுத்த வேண்டிய சுற்றுவட்டப்பாதைக்கு முன்பாகவே ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் வெளியேறிவிட்டது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.