Zomato பேகில் கத்தி - டெலிவரி ஊழியருக்கும், மினி வேண் ஓட்டுநருக்கும் இடையில் சரமாரி தாக்குதல்!

Tamil nadu
By Jiyath Sep 15, 2023 07:35 AM GMT
Report

வழி விடுவது தொடர்பாக உணவு டெலிவரி ஊழியருக்கும்,மினி வேண் ஓட்டுனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே, ஆலம்பாடியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மினி பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சோமாடோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் கணேஷ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் அவருக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

Zomato பேகில் கத்தி - டெலிவரி ஊழியருக்கும், மினி வேண் ஓட்டுநருக்கும் இடையில் சரமாரி தாக்குதல்! | Dispute Between Food Delivery Man And Driver I

இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

போலீசார் விசாரணை

அதனைத் தொடர்ந்து சோமாடோ ஊழியர் தனது உணவு டெலிவரி பேகில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மினி வேன் ஓட்டுனரை தாக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் சோமாடோ ஊழியரை தடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.