சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..டிஸ்னி பூங்கா மூடல்..!
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு.
அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா உலகம் முழுவதும் பிரபலமானவை.
சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான பொழுது போக்கு பூங்கா உள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால் பல்வேறு நகரங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனினும், அங்கு இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.
அதே சமயம் முடிந்தவரை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஷாங்காய் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.