மதம் குறித்து திமிராக பேசிய காவல் ஆய்வாளர் - அதிரடி பணி நீக்கம்..!
மத ரீதியாக அவதுாறாக பேசிய காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
மத ரீதியாக அவதுாறு கருத்து
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிபவர் ராஜேந்திரன். 1988 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த ராஜேந்திரனும், அவருடன் பணியில் சேர்ந்தவர்களும் இணைந்து வாட்ஸ் ஆப் குழு நடத்தி வந்தனர்.
அந்த குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கிறிஸ்டோபர் என்பவர் மதம் சார்ந்து கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜேந்திரன் தான் பேசிய ஆடியோ பதிவேற்றினார்.
அதில் ராஜேந்திரன் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
அதிரடி பணியிடை நீக்கம்
இது குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராஜேந்திரன் பிற மதத்தினரை அவதுாறாக பேசியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.