தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு நிராகரிப்பு

AIADMK
By Thahir Nov 25, 2022 05:46 PM GMT
Report

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழக அரசு எதிர்ப்பு

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் நடைபெற்றது.

Dismissal of Rajendra Balaji

அப்போது, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2 முறை நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்றும் கூறியுள்ளனர்.

மனு நிராகரிப்பு 

இதனால் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு தர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ராஜேந்திர பாலாஜியின் வழக்கில் இன்று முதல் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.