திஷா ரவிக்கு ஆதரவு கொடுத்த க்ரேட்டா துன்பெர்க்

protest freedom peaceful
By Jon Feb 26, 2021 01:29 PM GMT
Report

பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு ஆகியவை அடிப்படை மனித உரிமைகள், இவை ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் என பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்திருக்கிறார். டூல்கிட் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர் திஷா ரவிக்கு க்ரேட்டா துன்பெர்க் ஆதரவு அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டர் பதிவில், பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.