டெல்லி வன்முறை வழக்கில் கைதான திஷா ரவிக்கு ஜாமின்
கடந்த மாதம் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியில் வன்முறை அரங்கேறியது. அதன் பின்னர் விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தன. க்ரேட்டா தன்பர்க் போராட்டத்திற்கான ஆதரவான ஆவணம் ஒன்றை ட்வீட் செய்திருந்தனர். இதன் பின்னர் மிகப்பெரிய சதி இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவி என்கிற இளைஞரை டெல்லி போலீஸ் கைது செய்திருந்தது. வன்முறையை தூண்ட சதியில் ஈடுபட்டார் என அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்திருந்தது. இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் திஷா ரவி ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார், இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆதரவு திரட்டுவது தேசத் துரோகம் என்றால் சிறையில் இருப்பதே சிறந்தது என திஷா ரவி தெரிவித்திருந்தார்.
இன்று திஷா ரவிக்கு ஜாமின் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.