அவமானப்பட்ட நயன்தாரா...லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்..!

Nayanthara Vignesh Shivan Shah Rukh Khan
By Thahir 4 மாதங்கள் முன்

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜுன் மாதம் 9ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா 

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றனர். பின்னர் இந்தியா திரும்பி பின்னர் சென்னை வீட்டிற்கு கூட வராமல் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.

ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூபாய் 4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

Nayanthara

இந்தப் படத்தை முடித்த பிறகு நயன்தாராவின் 75-வது படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அவமானப்பட்ட நயன்தாரா 

ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் என பல பிரபலங்கள் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளனர். நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக கேட்டுள்ளார்.

Nayanthara

பாலிவுட்டில் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் இருவர் மட்டுமே ரூபாய் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தனர்.

தயாரிப்பாளர் நயன்தாரா சம்பளததை குறைத்து 5 கோடி ரூபாய் கேட்கும் படி கூறி இருக்கிறார். அதாவது தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் தாங்கள் நடிக்கும் பட புரமோஷனில் கலந்துகொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாலும் தவறில்லை. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியாகும் படங்களை மட்டுமே நயன்தாரா புரோமோசன் செய்து வருகிறார்.

மற்ற தயாரிப்பாளர்கள் எடுக்கும் படங்களில் புரமோஷனில் கலந்து கொள்வதில்லை என கூறப்படுகிறது. புரமோஷனில் நடிக்காத நயன்தாராவுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர்.