குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோர் மனித குலத்திற்கு ஓர் அவமான சின்னம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Apr 12, 2023 07:33 AM GMT
Report

பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோர் மனித குலத்திற்கு ஓர் அவமான சின்னம் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டபேரவையில் கூறியுள்ளார்.

ஆசிரியர் கைது

கடலூர் மாவட்டம் , விருத்தாச்சலம் நகராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அப்பள்ளியின் தாளாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுக கவுன்சிலராக இருந்தவர் என்பதால், திமுக கட்சியில் இருந்தும் அவர் நீக்கம் செய்யபட்டார்.

  முதலமைச்சர் விளக்கம்

இந்த நிலையில் இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார், அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் சட்டபேரவையில் விளக்கம் அளித்தார் அதில் ,சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டவுடன் அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டர்.

இறுதியாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோர் மனித குலத்திற்கு ஓர் அவமான சின்னம். அவர் மீது இந்த அரசு பாரபட்சமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.


மனித குலத்திற்கு அவமானம்

இந்த செய்தியை நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என கூறவில்லை. சம்பவம் பற்றி அறிந்ததும் உடடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என அப்போதைய முதலவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.