போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு

Ukraine
By Irumporai Nov 19, 2022 03:03 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உகரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வராத நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்ய அதிபர் புதின் தனது படைகளை வெளியேற்றுவதற்கு அடுத்த சிறந்த விஷயம் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு | Discussions With Russia To End Ukraine War Us

தலையிடாத அமெரிக்கா 

பேச்சுவார்த்தைகளுக்கு எப்போது தயாராக இருக்கிறார் என்பதையும், அந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதையும் ஜெலென்ஸ்கி தீர்மானிக்க வேண்டும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம் என்று கூறினார்.

மேலும், உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து நாங்கள் ரஷியர்களுடன் கலந்துரையாடப் போவதில்லை என்று அவர் கூறினார்.

அந்த உரையாடல்கள் நடக்கவில்லை. ஏனெனில் அதிபர் ஜெலென்ஸ்கி அதற்குத் தயாராக இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.