ஆழ்கடலில் வினோத ஏலியன்; புதிய உயிரினத்தால் அதிர்ந்த ஆய்வாளர்கள் - எங்கு தெரியுமா?
ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினத்திற்கு 'Unicumber' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதிய உயிரினம்
பசிபிக் பெருங்கடலில் புதிய உயிரினம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன் யாரும் கண்டிராத இந்த வினோத உயிரினம் பார்ப்பதற்கு ஏலியன் தோற்றத்தில் உள்ளது. இந்த உயிரினம் மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவிற்கும் இடைப்பட்ட பசிபிக் கடல் பிரதேசத்தில் வாழ்கிறது.
இவை அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில், கடலின் 11,480 முதல் 18,045 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ள இந்த உயிரினத்திற்கு 'Unicumber' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடல் குக்கும்பர்
இதனை கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இவை கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கை குப்பைகளை உண்டு உயிர்வாழ்கின்றன.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் "பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளது" என்று கூறியுள்ளனர். மேலும் இவற்றை குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.