ஒரே தெருவில் 20 உடல்கள் கண்டெடுப்பு - உக்ரைனில் அதிகரிக்கும் பரபரப்பு..!
உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில் ஒரே தெருவில் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. 37 நாட்களாக ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ரஷ்யாவின் படையெடுப்பால் பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. உக்ரைன் உடனான ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனிடையே கீவ் நகரில் உள்ள தெரு ஒன்றில் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றிய பிறகு,அங்கு ஒரே தெருவில் குறைந்தது 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எ.ஃப்.பி (AFP)செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தலைநகரின் வடமேற்கு புறநகர் நகரத்தில் குடியிருப்புப் பாதையில் பல நுாறு மீட்டர்கள் அளவுக்கு அந்த சடலங்கள் சிதறி கிடந்ததாகவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.