கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டால் 10% தள்ளுபடி.! நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் எங்கே?
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் கொரோனாவால் 1.3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி ஏப்ரல் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மத்தியில் தயக்கம் உள்ள நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.

கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சாப்பிடும் உணவு விலையில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உணவு விடுதிக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் அவர்கள் சாட்டப்பிடும் உணவிற்கு 10% விலை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.