நிறுத்தப்பட்ட தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு...கொந்தளித்த மக்கள் - தேதி அறிவித்த கோட்டாட்சியர்
Thai Pongal
Pudukkottai
By Thahir
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், ஜனவரி-8 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு
தைத்திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருந்ததால், பின்னர் தேதி குறிப்பிடப்படும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போட்டியை நடத்தும் விழாக்குழுவினர் மற்றும் மக்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி-8 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்