டிஸ்கோ சாந்தியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா...? - கணவன், மகளை இழந்து தவிக்கும் கண்ணீர் பக்கங்கள்

By Nandhini May 19, 2022 12:44 PM GMT
Report

1980ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியில் கவர்ந்திழுத்து கனவு கன்னியாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி.

இவரின் கவர்ச்சி நடனத்தில் மயங்காதவர் யாரும் இருக்கமாட்டார்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.

தமிழில் ‘வெள்ளை மனசு’ படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ‘ஊமை விழிகள்’ படத்தில் நடனமாடிய ‘இராத்திரி நேரத்து பூஜை’யில் என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

இப்படத்தின் பின்பு நிறைய பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான ‘துரைமுகம்’ படம் தான் இவருடைய கடைசி படம்.

இதனையடுத்து, 1996 -ம் ஆண்டு ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்தார் டிஸ்கோ சாந்தி. இத்தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகள் பிறந்தனர்.

ஸ்ரீஹரி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்தில் போலீஸாக நடித்து மாஸ் காட்டி இருந்தார்.

சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது -

ஒரு நாள் கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தேன்.

அப்போது, எனக்கு தெரியாமலே என் கணவர் ஸ்ரீஹரி என் கழுத்தில் தாலி கட்டினார்.

இதனையடுத்து, நான் சாமியிடம் வேண்டிக்கொண்டேன். எனக்கு முதல் கல்யாணம் ஆனால், உண்டியலில் தாலியை போடுவதாக வேண்டிருந்தேன்.

அதனால் அவர் கட்டிய தாலியை உண்டியலில் போட்டுவிட்டேன்.

பின்னர், என் கூட பிறந்தவர்களுக்கு திருமணம் ஆன பிறகு, வீட்டில் பெரியோர்கள் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

சந்தோஷமாக எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. எனக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 4 மாத இருந்த போது உடல்நலக்குறைவால் என் குழந்தை இறந்து விட்டார். இந்த துக்கம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இதனையடுத்து, என் வாழ்க்கையில் அடுத்து பெரிய இடி விழுந்தது. கடந்த 2013-ம் ஆண்டு என் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

என் கணவர் மரணத்திற்கு தவறாக கொடுத்த சிகிச்சை தான் காரணம். மருத்துவர்கள் போட்ட ஊசியினால் மூக்கு வாயெல்லாம் ரத்த வாந்தி எடுத்தார். இதனையடுத்து, மாரடைப்பு ஏற்பட்டு என் கணவர் அநியாயமாக உயிரிழந்து விட்டார் என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

தவறுதலாக நடந்து விட்டது எங்களை மன்னித்துவிடுங்கள் அதற்கு தேவையான பணம் தருகிறோம் என்று மருத்துவர்கள் சொன்னது என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை என்று திடுக்கிடும் தகவலை கூறினார்.

என் கணவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்ததார். தற்போது தன்னுடைய மகன்கள் உதவியுடன் அந்த அறக்கட்டளையை தான் நடத்தி வருகிறேன் என்று டிஸ்கோ சாந்தி உருக்கமான கூறினார்.  

டிஸ்கோ சாந்தியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா...? - கணவன், மகளை இழந்து தவிக்கும் கண்ணீர் பக்கங்கள் | Disco Shanti

டிஸ்கோ சாந்தியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா...? - கணவன், மகளை இழந்து தவிக்கும் கண்ணீர் பக்கங்கள் | Disco Shanti

டிஸ்கோ சாந்தியின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா...? - கணவன், மகளை இழந்து தவிக்கும் கண்ணீர் பக்கங்கள் | Disco Shanti