ரஜினிய தலைவரா பாத்தேன் - அரசியலுக்கு வராதது வருத்தம் தான் - லதா ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தமே என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
வருத்தமே
சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது ரொம்ப வருத்தம் தான் குறிப்பிட்டு, அவரை தலைவராகத்தான் பார்த்தேன் என்று கூறினார்.
வருத்தம் உள்ளது என்றாலும், அரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினிகாந்த் தன்னால் இயன்றததை செய்து கொண்டுதான் இருக்கின்றார் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
வழக்கு
2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந் நடிப்பில் அவரின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் நிறுவனம் - ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளது.
அதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டிருந்த நிலையில், ஒப்பந்தத்தின் படி தயாரிப்பு நிறுவனம் நடக்காததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் மொத்தமாக தொடரப்பட்ட 4 வழக்குகளில் 3 ரத்தான நிலையில், இன்னும் ஒரு வழக்கை மட்டும் கர்நாடக நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், விசாரணையை பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததன் அடிப்படையில், வழக்கின் விசாரணைக்காக லதா ரஜினிகாந்த் பெங்களூரு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.