சாலையில் மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கும் தம்பதி - அதிர்ச்சியளிக்கும் வீடியோ பதிவு

UPbrutalattack disabledperson relativesattack disputeoverbusiness noidacrime
By Swetha Subash Mar 30, 2022 08:22 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 3 சக்கர ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரை கொடூரமாக இருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு கஜேந்திரன் என்ற மாற்றுத்திறனாளியை சுற்றிவளைத்த ஒரு ஆணும், பெண்ணும் அவரை சரமாறியாக தாக்குகின்றனர்.

கட்டையால் கஜேந்திரனின் வாகனத்தையும் அடித்து நொறுக்குகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாக்கப்பட்ட நபரும், அந்த மாற்றுத்திறனாளியும் உறவினர்கள் என்றும், பள்ளி ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பை கஜேந்திரனிடம் ஒப்படைத்ததாகவும் ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் பள்ளி நஷ்டத்தில் போனதாகவும் இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கஜேந்திரனை தாக்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட கஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் தாக்கிய தம்பதிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.