இரண்டு கைகள் இல்லை..ஆனாலும் தன்னம்பிக்கையால் நீச்சல் அடிக்கும் சிறுவன்
கேரளாவில் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் நீச்சல் பழகி ஆற்றைக் கடந்து சாதனைப் படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமெண்ண பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷஹீத்தின் மகன் முகம்மது அஸீம். 8 ஆம் வகுப்பு படித்து வரும் இவனுக்கு பிறவியிலேயே இரு கைகள் இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்தார்.
இதனிடையே அஸீம் தனது இரு கால்களையும் உடலையும் அசைத்து சுமார் ஒரு மணி நேரம் கேரளாவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஆலுவ பெரியாறு ஆற்றை நீந்தி கடந்துள்ளார்.
கைகள் இல்லாமல் வலுவிலந்த கால்களைக் கொண்டு அவர் ஆற்றில் நீச்சல் அடிப்பதைக் கண்டு சுற்றியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இரண்டு வார கடின பயிற்சிக்கும் உழைப்புக்குப் பிறகு தான் அஸீம் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதாக அவனது பயிற்சியாளர் சஜி வாலாசேரி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உடல் குறைபாட்டை வெல்லும் மன வலிமை மற்றும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்ததால் தான் இந்த சாதனையை அவரால் படைக்க முடிந்ததாக சஜி கூறியுள்ளார்.