முதல்முறையாக வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்
Yuvan shankar raja
Director Vishnuvardhan
Ghibran
By Petchi Avudaiappan
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்ததாக மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இதனிடையே தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் முதல்முறையாக ஜிப்ரான் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.