நாவல்களை படமாக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் - அடுத்து என்ன நாவல்? சூரியா தான் நடிகர்!

actor director surya vetrimaran
By Anupriyamkumaresan Jun 13, 2021 03:03 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in திரைப்படம்
Report

தமிழ் திரையுலகில் நாவல்கள் மற்றும் சிறுகதையை மையமாக வைத்து படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

நாவல்களை படமாக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் - அடுத்து என்ன நாவல்? சூரியா தான் நடிகர்! | Director Vetrimaran Vadivasal Novel Surya Hero

இவர் இயக்கிய 5 படங்களும் அசுர வெற்றி அடைந்துள்ளன. கடந்த சில காலமாகவே இவர், நாவல்களை மையமாக கொண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

நாவல்களை படமாக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் - அடுத்து என்ன நாவல்? சூரியா தான் நடிகர்! | Director Vetrimaran Vadivasal Novel Surya Hero

தற்போது நடிகர் சூரி நடிப்பில் இயக்கப்பட்டு வரும் விடுதலை திரைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்கருவாக ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி இருக்கும் என கூறப்படுகிறது. 

நாவல்களை படமாக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் - அடுத்து என்ன நாவல்? சூரியா தான் நடிகர்! | Director Vetrimaran Vadivasal Novel Surya Hero