மேலும் ஒரு பிரிவை சந்திக்கும் தனுஷ்? - வருத்தத்தில் ரசிகர்கள்..!
நடிகர் தனுஷுக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரையும் சேர்த்து வைக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முயன்ற நிலையில் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில்,வெற்றி மாறனை தொடர்பு கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.
வெற்றி படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றி மாறனை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு வெற்றி மாறன் தான நிறைய படங்களில் கமிட் ஆகி இருப்பதால் இரண்டு வருடங்கள் கழித்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் தனுஷ் உடனடியாக படம் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளார். அதெல்லாம் இப்போ முடியாது என்று வெற்றி மாறன் கூறியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சில வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷின் ரசிகர்கள் இருவரும் நல்ல நண்பர் இதெல்லாம் வெறும் வதந்திகள் என கருத்து தெரிவித்துள்ளனர்.