நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடிகர் விஜய் எளிமையானவர் - பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி
விஜய் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு எளிமையானவர் என்று விஜய் 66 படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி தெரிவித்துள்ளார். நெல்சன் படத்தை முடித்துவிட்டு விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் 66 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி விஜய்யை நேரில் சந்தித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், விஜய் 66 படம் தமிழ் படம்தான். தெலுங்கிலும் வெளியாகிறது. அவ்வளவுதான். நடிகர் விஜய்யிடம் கதை சொல்ல தயாரிப்பாளர் தில் ராஜு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கொடுத்தார்.
அவரது வீட்டிற்கு சென்றேன். விஜய் சார் வந்த பேசிய விதம், என்னை நலம் விசாரித்த விதம், கதையைக் கேட்ட விதம் என்று நாம் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவுக்கு எளிமையானவர். இயக்குநர்களுக்கு மிகவும் சௌகரியம் ஆனவர் என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.