வடிவேலு மட்டுமல்ல நாய்சேகர் படத்தின் முக்கிய பிரபலத்துக்கும் கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

covid19 directorsuraj naisekarreturns நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
By Petchi Avudaiappan Dec 25, 2021 04:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மீதான சினிமாவில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை மருதமலை, படிக்காதவன் ஆகிய படங்களின் இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புக்காக வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். 

 அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு வடிவேல் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வடிவேலுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார். தானும் வடிவேலுவும் நலமாக இருப்பதாக சுராஜ் தெரிவித்துள்ளார்.