'புஷ்பா' படத்தில் நிர்வாண காட்சியா ...அதுவும் இந்த சீன்லயா ? - இயக்குநரின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
புஷ்பா படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவரையும் நிர்வாணமாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள புஷ்பா படம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இரு பாகங்கள் கொண்ட புஷ்பா படத்தின் முதல் பாகமான இந்த புஷ்பா தி ரைஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றாலும் ஐந்து மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றீயா' பாடல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவுக்கு சென்றது. மேலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையே காரில் நடைபெறும் ரொமான்ஸ் காட்சி ஆபாசமாக இருப்பதாக அந்த காட்சியை படக்குழு நீக்கியது.
இந்நிலையில் இந்தப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சுகுமார் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் இருவரும் நிர்வாணமாக சண்டையிடுவது போல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் எதிர்ப்புகள் கிளம்பும் என கருதி இருவரும் டவுசர் அணிந்து சண்டையிடுவது போல காட்சியை மாற்றி அமைத்ததாகவும் கூறியுள்ளார்.