நீங்க சினிமா கிங் : PS1 படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்

Ponniyin Selvan: I Shankar Shanmugam Mani Ratnam
By Irumporai Oct 05, 2022 09:04 AM GMT
Report

பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள், திரை விமர்சகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் இப்படத்தினை கொண்டாடி வரும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமாக உள்ளனர்.

 பொன்னியின் செல்வன்

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் படம் குறித்த ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நீங்க சினிமா கிங் : PS1 படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர் | Director Shankar Latest Tweet Ponniyin Selvan

அதில் பல வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் ஒரு தரமான தமிழ் சரித்திர படம். இயக்குனர் மணிரத்னம் சினிமாவின் கிங் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ரவிவர்மாவின் ஒளிப்பதிவிற்கு ஹாட்ஸ் ஆஃப். ஏ.ஆர். ரஹ்மானின் இசை எனக்குள் நுழைந்து ஆழமாக பதிந்து விட்டது.

சினிமாவின் கிங் 

3 மணி நேரமும் நம்மை தனது இசையில் ஆக்கிரமித்து விட்டார். இந்த காவிய திரைப்படத்தை நமக்கு அளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இயக்குனர் மணிரத்னம் தான் முதல் பான் இந்தியா இயக்குனர் என தெரிவித்து இருந்தார் இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.