பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குநர் : சோகத்திற்கு காரணம்
பிரபல இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் தற்போது சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
சங்கரின் உதவி இயக்குநர்
இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் செல்வேந்திரன். இயக்குநர் ஷங்கரிடம், காதலன், ஜீன்ஸ், இந்தியன் ஆகிய வெற்றிப் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்
இதனையடுத்து ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தான் ராய் லக்ஷ்மி தமிழில் நாயகியாக அறிமுகமானார். மேலும் ரம்பா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாப்பாட்டுக்கு வழியில்லை
இதனையடுத்து ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். இவர் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அவருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்தில் பிதாமகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த துரை என்ற தயாரிப்பாளர் தனது மருத்துவ செலவுக்கு கூட காசில்லாம் தவிக்கும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.